பள்ளத்தில் சிக்கிய சாரங்கபாணி கோயில் தேர்! தேரோட்டம் தடை.!
Sarangapani Temple Chariot Stuck ditch
கும்பகோணம், சாரங்கபாணி கோவில் தேரோட்டம் இன்று காலை 7.05 மணிக்கு வடம் பிடித்து தொடங்கப்பட்டது. தேரோட்டம் முற்பகல் 10:30 முதல் 10:45 மணியளவில் சங்கரபாணி தெற்கு வீதிக்கு சென்று கொண்டிருந்தது.
அபபோது திடீரென இடது புற சக்கரம் சுமார் 5 அடி ஆழத்துக்கு திடீரென உள்வாங்கியது. இதனை தொடர்ந்து பள்ளத்தில் மணல், ஜல்லி, கற்கள் போன்றவை கொட்டப்பட்டு தேர் சக்கரத்தை மீட்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே குடிநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் அண்மையில் அந்த பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு சீர் செய்யப்பட்டது. பிறகு பள்ளம் சரியாக மூடப்படாத நிலையில் தேர் சக்கரம் உள் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தேரோட்டம் 2 மணி நேரம் தடைபட்டுள்ளது.
English Summary
Sarangapani Temple Chariot Stuck ditch