கஞ்சா வழக்கில் "வலது கையில் கட்டுடன்" சவுக்கு சங்கர் ஆஜர்.!! என்னாச்சு?
Savukku Shankar appeared in ganja case with right hand bandage
காவல்துறையினரை விமர்சனம் செய்ததாக பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரை மதுரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்த நிலையில் அவர் மீது தேனி மாவட்ட போலீசார் கஞ்சா வழக்கு பதிவு செய்தனர். அதேபோன்று சென்னை மாநகர காவல் தலைநகரம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பெண் பத்திரிக்கையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தனர்.
கடந்த 24 மணி நேரத்திற்குள் சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கோவை மத்திய சிறையில் அவர் தாக்கப்படுவதாக அவரது தாய் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்படவில்லை என கோவை மாவட்ட காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.
மேலும் சவுக்கு சங்கரின் தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்படவில்லை என விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில் சவுக்கு சங்கரின் உடல்நிலை குறித்து கோவை சட்ட சேவைகள் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவ்வாறு இருக்க கஞ்சா வழக்கில் தேனி மாவட்ட காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்கில் மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது அவரது வலது கையில் கட்டு போடப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தில் தமிழக அரசும் பொது மக்களுக்கு காவல்துறையும் பகிரங்கமாக விளக்கம் அளித்திருந்த நிலையில் தற்போது சவுக்கு சங்கர் கையில் கட்டுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
English Summary
Savukku Shankar appeared in ganja case with right hand bandage