உயர்நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் சொன்ன செய்தி - காவல்துறையின் கோரிக்கையை ஏற்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு!
Savukku Shankar Case Chennai HC Aug
தனக்கு எதிரான 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிடக்கோரி யூடியூபர் சவுக்கு சங்கர் தொடர்ந்த வழக்கில், அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா என விளக்கமளிக்க, காவல் துறை தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.
இந்த வழக்குகளில் பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் நேரில் ஆஜராகிவரும் சவுக்கு சங்கருக்கு ஜாமின் கிடைத்து வருகிறது.
இந்த நிலையில், தன்மீது பதியப்பட்ட 17 வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க உத்தரவிடக்கோரி சவுக்கு சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றத்தில், ஒரு வழக்கில் ஜாமின் வழங்கினால் மற்றொரு வழக்கில் கைது செய்யப்படுவதாக சவுக்கு சங்கர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா என சரிபார்க்க அவகாசம் வழங்க வேண்டும் என காவல் துறை தரப்பு கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது, அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா? என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதற்க்கு, அனைத்து வழக்குகளும் ஒரே சம்பவத்துக்காக பதியப்பட்டதா என சரிபார்க்க அவகாசம் வழங்க வேண்டும் என காவல் துறை தரப்பு கோரிக்கை வைத்தது.
இதனையடுத்து காவல் துறை கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
English Summary
Savukku Shankar Case Chennai HC Aug