சவுக்கு சங்கர் வழக்கு: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


பெண் காவலர்கள் குறித்து அவதூறாக, அவமரியாதையாக பேசியதாகவும் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தேனியில் விடுதி ஒன்றில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்யும்போது, அவரின் உதவியாளர் கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். 

இந்த வழக்குகளில் தற்போது அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் சவுக்கு சங்கர் மீது பதியப்பட்டு இருந்த வழக்குகளில் அடுத்தடுத்து ஜாமின் கிடைத்து வருகிறது.

மேலும், அவர் விரைவில் ஜாமீனில் வெளியே வருவதற்கு உண்டான வாய்ப்பு உள்ளதாக இருந்த நிலையில், மீண்டும் கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கர் மீது குண்டாஸ் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது, 

இதற்கிடையே, சவுக்கு சங்கர் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பழிவாங்கும் நோக்கில் குண்டாஸ் போடப்பட்டுள்ளது தெரிவித்தார்.

இதற்கு உச்சநீதிமன்ற நீதிபதி, சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டாஸ் போடப்பட்டுள்ளதா? என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார். மேலும் சவுக்கு சங்கர் மீது மேல் நடவடிக்கை கூடாது என்றும், இந்த வழக்கு குறித்து பதில் அளிக்க கோரி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savukku Shankar Case SC Order to TNGovt Tamilnadu DMK MkStalin


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->