சவுக்கு சங்கர் வழக்கு: குண்டர் சட்டத்தை ஏற்க முடியாது! தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தினாரா? தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!  - Seithipunal
Seithipunal


பெண் போலீசார் குறித்து அவமரியாதையாக, அவதூறாக வீடியோ வெளியிட்டதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக்கோரி, அவரது தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, இதே கோரிக்கையுடன் உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தாயார் மேல்முறையீடு வழக்கு ஒன்றையும் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், அரவிந்த்குமார் அடங்கிய அமர்வு முன் கடந்த 4 தினங்களுக்கு முன் விசாரணைக்கு வந்ததது.

அப்போது, விசாரணையில் இருந்து விலகுவதாக தெரிவித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், தான் இடம்பெறாத அமர்வு முன் இந்த மேல்முறையீட்டு மனுவை பட்டியலிட தலைமை நீதிபதிக்கு கோப்பை அனுப்பி வைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் புதிய அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது நீதிபதிகள், ஒருவரை தடுப்புக் காவலில் வைப்பது என்பது மிக தீவிரமான விஷயம். சவுக்கு சங்கர் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினாரா? 

மனம் போன போக்கில் குண்டர் சட்டத்தை பயன்படுத்துவதை ஏற்க முடியாது. அதே சமயத்தில் சவுக்கு சங்கரின் நடத்தை மன்னிக்க முடியாததே. அதே நேரம், ஏன் அவருக்கு இடைகால பாதுகாப்பு தரக்கூடாது? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், இடைக்கால தடை விதிக்க முடியாது என்று கொரிய நீதிபதிகள், சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்ததற்கு எதிராக அவரது தாயார் தொடர்ந்து மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Savukku Shankar case Supreme Court order july 2024


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->