சவுக்கு சங்கருக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு! உச்சநீதிமன்றத்தில் பரபரப்பு மனு! தள்ளிப்போன இறுதி விசாரணை!
Savukku Shankar Case TNGovt SC Case
சவுக்கு சங்கர் மீது இரண்டாவது முறையாக தொடரப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரி சவுக்கு சங்கரின் தாயார் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்குகளில் சவுக்கு சங்கர் ஜாமீன் பெற்றிருந்தாலும் குண்டாஸை ரத்து செய்ய அதை ஒரு முகாந்திரமாக எடுத்துக்கொள்ள கூடாது எனவும் தமிழ்நாடு அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சவுக்கு சங்கரின் வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன் 44 வழக்காக பட்டியலிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன் சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்ட 16+ வழக்குகளை ரத்து மற்றும் 2 வது குண்டாஸை ரத்து செய்ய கோரிய மனுக்கள் மீதான இறுதி விசாரணை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை செய்ய போதிய நேரமின்மை காரணமாக இன்று பட்டியலிடப்பட்ட (மீதமிருந்த) அனைத்து வழக்கு விசாரணையும், இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள படமாலே 20/09/24 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
English Summary
Savukku Shankar Case TNGovt SC Case