சவுக்கு சங்கர் வழக்கு: தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கி, பாடம் எடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!
Savukku Shankar Gundas Case Chennai HC Judges Advise to TNgovt
சவுக்கு சங்கர் வழக்கு: தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கி, படம் எடுத்த சென்னை உயர்நீதிமன்றம்!
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி, சவுக்கு சங்கரின் தாய் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அமர்வு, சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கில் சில முக்கிய கருத்துக்களையும், தமிழக அரசுக்கு சில அறிவுரைகளையும் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் வழங்கியுள்ளனர்.
சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடித்த உத்தரவு உள்நோக்கம் கொண்டதால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
77வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் மக்களின் குரலை மீண்டும் முடக்க வேண்டுமா?
அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தால் உரிய சட்டங்களின் கீழ் மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களின் குறைகளை புரிந்து கொள்ளும் கருவியான சமூக ஊடகங்களை அரசு முடக்க கூடாது.
சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியது அவசியமாகி உள்ளது என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த கருத்தினை தெரிவித்துள்ளனர்.
English Summary
Savukku Shankar Gundas Case Chennai HC Judges Advise to TNgovt