எல்லாமே பொய் : பீதியை கிளப்பும் மாணவி ஸ்ரீ மதியின் தாய்.!
school girl sri mathi mysterious death cctv footage
கள்ளக்குறிச்சி : கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம், 13-ந் தேதி மர்மமாக இறந்தார்.
ஸ்ரீமதியின் மரணத்தில் இருப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்து, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும், இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு (CBCID) போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, மாணவி ஸ்ரீமதி எழுதியதாக கூறப்படும் கடிதம், ஸ்ரீமதி வகுப்பறை மற்றும் பள்ளியின் மாடிக்கு செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் ஒவ்வொன்றாக கசிந்து வருகிறது.
இந்நிலையில், நேற்று மதியம் ஸ்ரீமதி தொடர்பாக மீண்டும் ஒரு சிசிடிவி காட்சி வெளியானது.
அந்த காணொளியில், மாணவியை 3 பெண்கள், ஒரு ஆண் உட்பட 4 பேர் தூக்கிச் செல்வது பதிவாகி உள்ளது. மேலும், ஜூலை, 13-ந் தேதி காலை 5.24 மணிக்கு இந்த கட்சி பதிவாகியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாணவியின் தாய் செல்வி தெரிவிக்கையில், "சி.சி.டி.வி. காட்சி பொய். இதை அவர்கள் அப்போதே காண்பித்திருக்கலாம். யார் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இது அப்பட்டமான பொய்யான சி.சி.டி.வி. பதிவு. என் மகள் ஸ்ரீமதி விழுந்த இடம் வேறு, தூக்கி செல்லும் இடம் வேறாக உள்ளது. மேலும், 5.30 மணிக்கு முன்பு சி.சி.டி.வி. பதிவு எங்கே? எத்தனை மணிக்கு என் மகள் விழுந்தாள் என்பதை காண்பிக்கவில்லை. இதன் மூலம் எங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது" என்று செல்வி தெரிவித்துள்ளார்.
English Summary
school girl sri mathi mysterious death cctv footage