மாணவிகளிடம் கைவரிசையைக் காட்டிய தலைமையாசிரியர் - தூத்துக்குடியில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு அருகே இயங்கி வரும் தொடக்க பள்ளி ஒன்றில் தூத்துக்குடியை சேர்ந்த ஜான்சன் என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் பள்ளியில் படிக்கும் 2 மாணவிகளிடம் சில்மிஷம் செய்தும், செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து தொல்லை கொடுத்தும் வந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் சம்பவம் குறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். உடனே அவர்கள் சம்பவம் தொடர்பாக கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

அந்தப் புகாரின் படி போலீசார், பள்ளிக்கூடத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது, ஆசிரியர் ஜான்சன் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜான்சன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நேற்று கைது செய்தனர். 

பின்னர் அவரை தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பேரூரணி ஜெயிலில் அடைத்தனர்.பள்ளி மாணவிகளிடம் தலைமையாசிரியர் தவறாக நடந்துகொண்ட சம்பவம் சக மாணவிகள் மற்றும் பெற்றோரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school head master arrested for harassment in thoothukudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->