நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி - சோகத்தில் கிராம மக்கள்.!
school student died drowned water in viruthunagar
விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் மகேஸ்வரன் பன்னிரண்டு வயதுடைய இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளியில் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மகேஸ்வரன் நேற்று மாலை கண்மாயில் குளிப்பதற்காக நண்பர்களுடன் சென்றார்.
அப்போது அவர் எதிர்பாராமல் தவறி விழுந்து ஆழமான பகுதிக்குள் சென்று விட்டார்.
இதைப்பார்த்த சக நண்பர்கள் சம்பவம் குறித்து ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதைக்கேட்டு ஓடிவந்த அவர்கள் கண்மாயில் இறங்கி மகேஸ்வரனை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதனை செய்த மகேஸ்வரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்மாயில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
English Summary
school student died drowned water in viruthunagar