வடலூரில் சோகம் - விளையாட்டின் போது மாணவனின் உயிரை பறித்த ஈட்டி.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் ஈட்டி பாய்ந்து சிகிச்சையில் இருந்த மாணவன் கிஷோர் இன்று மூளைச்சாவு அடைந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் தர்ம சாலை பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன். இவர் நெய்வேலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் கிஷோர் வடலூர் சந்தை தோப்பு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். 

விளையாட்டிலும் ஆர்வமாக இருந்த கிஷோர் சிலம்பம் போட்டியில் கலந்துகொண்டு மாவட்ட, மாநில அளவில் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் 24ம் தேதி மாலை மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

அப்போது, ஈட்டி எறிதல் பயிற்சியில் நின்ற கிஷோரின் தலையில் ஈட்டி பாய்ந்து படுகாயம் அடைந்தார். இதை பார்த்த ஆசிரியர்கள் கிஷோரை மீட்டு விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த நிலையில், சிகிச்சையில் இருந்த மாணவன் கிஷோர் இன்று திடீரென மூளைச்சாவு அடைந்தார். இந்தத் தகவலை கேட்டு மாணவனின் தாய் சிவகாமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். 

உடனே அவரது குடும்பத்தினர் சிவகாமியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது, மாணவனின் தாய் நலமாக உள்ளார். மகன் உயிரிழந்த தகவல் கேட்டு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

school student died in vadalur for spear attack


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->