பள்ளி மாணவனை ரவுண்டு கட்டிய தெரு நாய் - கையை இழந்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவனை ரவுண்டு கட்டிய தெரு நாய் - கையை இழந்த சம்பவம்.!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் அருகே காக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் திருமுருகன் மகன் கவன்ராஜ். இந்த சிறுவன் அதேபகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் சுதந்திர தினமான நேற்று பள்ளியில் நடந்த கொடியேற்று நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு பின்னர் வீடு திரும்பியுள்ளார். அப்போது அந்தவழியே சுற்றி திரிந்த வெறிநாய் ஒன்று கவன்ராஜ் மீது திடீரென பாய்ந்து கடித்துள்ளது. 

இதனால் அந்த சிறுவன் கத்தி கூச்சலிட்டுள்ளார். இந்த சத்தம் கேட்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் நாயின் மீது கற்களை வீசி துரத்தி அந்த மாணவனை காப்பாற்றினர். இதில் மாணவனின் இடது கையில் பெரும் காயம் ஏற்பட்டுள்ளது.

உடனே பொதுமக்கள் அந்த மாணவனை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு, அந்த மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவனின் இடது முழங்கைக்கு மேல் கடுமையான காயம் ஏற்பட்டிருப்பதால் சிறுவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க காயம் பட்ட கையினை அகற்ற வேண்டிய நிலை உள்ளதாக தெரிவித்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

school student hand remove for dog bite in ramanathapuram


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->