தமிழ்நாட்டில் "கள்ளக்கடலின் ராட்சத அலைகள்".. இன்று மாலை வரை வார்னிங்.!! உஷார்
Seahorse have big waves in tamilnadu until today evening
கேரளா மற்றும் தென் தமிழகத்தில் கடற்கரையில் நேற்று முன்தினம் முதல் கள்ளக் கடலினும் நிகழ்வு நடந்தது. இதன் காரணமாக தென் தமிழக கடற்கரைகளில் ராட்சச அலைகள் எழுந்தன. இந்த நிகழ்வு நேற்று இரவு 11:30 மணி வரை மட்டுமே நீடிக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று மாலை வரை தமிழக கடல் பகுதி கொந்தளிப்பாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக தென் தமிழக கடற்கரை மற்றும் கேரள மாநில கடற்கரைகளில் கள்ளக் கடல் நிகழ்வு நீடிப்பதால் பொதுமக்கள் யாரும் கடலில் இறங்கி குளிக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தென் தமிழக கடற்கரை பகுதிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்ட கடலோரப் பகுதிகளுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்ட கடற்கரைகளுக்கு மஞ்சள் நில எச்சரிக்கும் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கன்னியாகுமரி தூத்துக்குடி ராமநாதபுரம் திருநெல்வேலி கடற்கரை பகுதிகளுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கள்ளக் கடல் நிகழ்வுகள் சுமார் 2 மீட்டர் உயரம் வரை பேரலைகள் உருவாகும் என்பதால் பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க கள்ளக் கடல் நிகழ்வுகள் சுமார் 2 மீட்டர் உயரம் வரை பேரலைகள் உருவாகும் என்பதால் மீனவர்கள் மற்றும் கடற்கரையோரம் வசிப்பவர்கள் உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று மாலை வரை யாரும் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
Seahorse have big waves in tamilnadu until today evening