இடைநிலை ஆசிரியர் தேர்வு மதிப்பெண் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


அரசு பள்ளியில் இடைநிலை ஆசிரியர் நேரடி நியமனத்துக்கான போட்டித்தேர்வு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 25 ஆயிரத்து 319 பேர் எழுதினார்கள்.

இந்தத் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் கடந்த மாதம் 28-ந்தேதி வெளியானது. இதன் மீது ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் அதுகுறித்து இணையவழியில் முறையிட தேர்வர்களுக்கு கடந்த மாதம் 28-ந்தேதி முதல் கடந்த 3-ந்தேதி வரை வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அதன் படி பெறப்பட்ட ஆட்சேபணைகள் பாடவாரியாக வல்லுனர்கள் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு அவர்கள் பரிந்துரைத்த இறுதி விடைக்குறிப்புகளின் அடிப்படையில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.

இந்த நிலையில், பகுதி பி-யில் தமிழ்மொழி வினாக்கள் கொண்ட வினாத்தாளை எழுதிய அனைத்து தேர்வர்களின் மதிப்பெண்கள் மற்றும் இறுதி விடைக்குறிப்புகள் www.trb.tn.gov.in ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Secondary Teacher Exam marks Release


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->