குஜராத்தில் 300 கிலோ போதைப்பொருள் பறிமுதல் - கடலோர காவல்படை அதிரடி.!!
300 kilo drugs seized in gujarat
குஜராத் மாநிலத்தில் பயங்கரவாத ஒழிப்பு படை மற்றும் இந்திய கடலோர காவல் படை இணைந்து கடந்த இரண்டு நாட்களாக சர்வதேச கடல் எல்லை கோட்டு பகுதியில் சோதனையில் ஈடுபட்டது.

இந்த சோதனையில், சுமார் 1,800 கோடி மதிப்புள்ள 300 கிலோ எடை கொண்ட போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் குறித்து இந்திய கடலோர காவல் படை வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "குஜராத் கடலோர பகுதியருகே மேற்கொண்ட சோதனையின்போது, எங்களுடைய கப்பலை கடத்தல்காரர்கள் அடையாளம் கண்டு கொண்டனர்.
அவர்கள் உடனே, போதை பொருட்களை கடலுக்குள் வீசி விட்டு தப்பி செல்ல முயன்றனர். அந்த போதை பொருட்கள் கடலில் இருந்து கைப்பற்றப்பட்ட பின்னர் பயங்கரவாத ஒழிப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது" என்றுத் தெரிவிக்கப்பட்டது.
English Summary
300 kilo drugs seized in gujarat