மீன் நாற்றம் அடிக்குதா? கடற்கரையில் சமாதி கட்டலாமா? பேனா சிலை வைக்கலாமா? - சீமான் ஆவேசம்!
Seeman Condemn Pattinampakkam Loop Road Issue
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை செல்லும் கடற்கரை லூப் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மீன்கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
பட்டினப்பாக்கம் லூப் சாலையில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களுக்கு நேரடியாக மீன்களை விற்பனை செய்து வரும் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் தடைபட்டுள்ளதாக கூறி சாலையின் நடுவே படகை நிறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் போராட்டத்திற்கு நேரில் சென்ற நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ஆதரவை அவர்களுக்கு தெரிவித்தார்.
தொடர்ந்து போராட்டத்தில் பேசிய சீமான், "மீனவர்கள் பிரச்னைக்கு நியாயமான தீர்ப்பு வந்தால் இதை விட்டு விடலாம், இல்லையென்றால் வழக்கு போடுவேன்.
மீன் நாற்றம் அடிப்பதாக இருந்தால் நீங்கள் செல்லும் இடங்களை மாற்றுங்கள், வேறு வழியாக செல்லுங்கள். கடற்கரையில் மீன் விற்கக் கூடாது, ஆனால் கடலில் பேனா சிலை வைக்கலாமா?
இதற்கு உங்களிடம் பதில் இருக்கிறதா? மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடற்கரை ஓரத்தில் மீன் விற்கக் கூடாது, ஆனால் கடற்கரையில் சமாதி கட்டி எல்லோரையும் புதைக்கலாமா? இது ஏற்புடையதா?" என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
English Summary
Seeman Condemn Pattinampakkam Loop Road Issue