தேர்தலில் வெற்றி இல்லை... இதுவே எங்கள் கனவு..! - மனம் திறந்து பேசிய சீமான்.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை, சீர்காழியில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் சகோதரி திருமண விழாவில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். 

அப்போது அவர் தெரிவித்திருப்பதாவது, என்னுடைய நம்பிக்கை கூறிய தளபதி காளியம்மாள் தங்கையின் திருமணம் எனது தங்கையின் திருமணம். நாங்கள் பாராளுமன்றத்திற்கு சென்று பேசுகிறோமோ இல்லையோ மக்கள் மன்றத்தில் எங்கள் கருத்துக்களை பேசி வருகிறோம். 

தேர்தலில் வெற்றி பெறுவது இல்லை எங்களது கனவு. மக்களின் மனதை வெல்வது தான் எங்களது கனவு. பிரபாகரன் காட்டிய வழியில் அவர் விட்டுச் சென்ற பணியை அவர் ஆயுதம் மிச்சம் வைத்ததை அரசியலாக இன்று முடிவு எடுக்க வேண்டும். 

என் தோளுக்கு துணையாக என் படைப்பு வலிமை மிக்க தளபதியாக என்னுடைய சகோதரி காளியம்மாள் இருக்கிறார். தேர்தலுக்குப் பிறகு இவ்வளவு சொந்தங்களை கூட்டத்தை பார்ப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. 

இன்றைக்கு பெரும் கடமையும் பொறுப்பும் உங்களது பிள்ளைகளால் எங்களது தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது. உயர்ந்த லட்சியம் உழைப்பே தவிர வேறு ஒன்றும் கிடையாது. அதனால் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்  என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman says our dream win peoples hearts


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->