தைப்பூச நாளில் சிறப்பு முகாம் நடத்துவதா? வேறு நாளில் மாற்ற சீமான் வலியுறுத்தல்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கான சிறப்பு முகாம் இன்று மற்றும் நாளை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் நாளை தைப்பூசம் என்பதால் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாமை வேறு ஒரு நாட்களில் நடத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம் இன்றும் நாளையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் சார்பாக மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இறைவன் முப்பாட்டன் முருகனின் தைப்பூசத் திருவிழா தமிழ்நாட்டில் நாளை நடைபெற உள்ள நிலையில் பெரும்பாலான மக்கள் நாளை சிறப்பு முகாமில் கலந்து கொள்ள முடியாத நிலையே உள்ளது.

ஏற்கனவே தமிழர்களின் தனிப்பெரும் தேசிய திருவிழாவாம் தைப்பொங்கல் நாளன்று வங்கி தேர்வினை வைத்து தமிழ் மாணவர்கள் தேர்வு கலந்து கொள்ள முடியாத நெருக்கடியான சூழலை உருவாக்கியது இந்திய ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி.

தற்பொழுது தேர்தல் ஆணையமும் இது போன்ற ஒரு சூழலை அளித்து நெருக்கடி அளிப்பது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

ஆகவே நாளை நடைபெற உள்ள சிறப்பு முகாமை வேறு ஒரு ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பாக தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறேன்" என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman urged voter special camp on other days


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->