ஆளவந்தார் நாயக்கர் அறக்கட்டளை விவகாரத்தில் பாமகவின் குரலுக்கு செவிசாய்த்த தமிழக அரசு.!! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலி பகுதியில் உள்ள ஆயிரம் காணி ஆளவந்தார் நாயக்கர் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை அளவந்தார் நாயக்கரின் நோக்கங்களுக்கு மாறாக தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சிகளை தடுத்த நிறுத்த வேண்டும் எனவும், இறைப்பணி தவிர்த்து வன்னியர்களின் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் வாழ்நிலை மேம்பாட்டுக்கான திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தி கடிதம் எழுதி இருந்தார். 

மருத்துவர் ராமதாஸ் எழுதிய கடிதத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் "ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரை பார்க்க முயற்சிகள் நடப்பதாக தாங்கள் அளித்த மனு குறித்து கீழ்க்கண்டவாறு தெரிவிக்கப்படுகிறது: 

நெம்மேலியை சார்ந்த ஆளவந்தார் நாயக்கர் என்பவர் ஆவண எண். 3/1914 நாள் 22.06.1914 இல் எழுதி வைத்த உயிலில் அவரால் சுயமாக சம்பாதித்த சொத்துக்களில் இருந்து வரும் வருவாயிலிருந்து திருவிடந்தை, திருக்கடல் மல்லை மற்றும் திருப்பதி ஆகிய இடங்களில் உள்ள திருக்கோயில்களில் திருகாணிக்கை வழங்கிடும் தர்ம காரியங்களுக்கு செலவிடுமாறு தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அறக்கட்டளைக்கென ஒரு நிர்வாக திட்டம் ஏற்படுத்தப்பட்டு உத்தரவிடப்பட்டது.

அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு 226/1916 நாள் 25.04.1918 அன்று பிறக்கப்பட்ட உத்தரவில் அறக்கட்டளை நிர்வாக செலவு தணிக்கை மற்றும் உற்சவங்களுக்கான செலவினங்கள் போக மீதம் உள்ள தொகையினை சமயக் கல்வி வழங்கிடவும் தமிழ் பிரபந்தங்களை கற்பிக்கவும் பயன்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்து சமய அறக்கொடைகள் சட்டம் 1927 இன் படி செங்கல்பட்டு மாவட்டம் நீதிமன்றத்தால் O.S.1/1943ல் 24.09.1946ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் நிர்வாக திட்டம் மாற்றி அமைத்து உத்திரவிடப்பட்டுள்ளது. அதன்படி அறக்கட்டளை காண அறங்காவலர்களை நியமனம் செய்யும் அதிகாரம் அறநிலைய வாரியத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்து சமய அறக்கோடைகள் சட்டப்பிரிவு 64(5)ன் படி O.A.19/1960ல் நிர்வாகத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிர்வாக திட்டத்தில் செயல் அலுவலர் ஒருவரை நியமனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஆளவந்தார் அறக்கட்டளை நிலங்களை பாதுகாத்திட இவ்வரசு பொறுப்பேற்றவுடன் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

1. ரூ. 20 கோடி மதிப்புள்ள 5.99 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.

2. அறக்கட்டளை சொத்துக்களை பாதுகாத்திட ரூ. 10.4 கோடி செலவில் சுற்றுச்சூழல் அமைக்கும் பணி இந்து சமய அறநிலையத்துறை நிதி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

3. குடிநீர் வடிகால் வாரியத்துடன் நிறைந்து நிலுவைத் தொகை ரூ. 10,03,52,532/- வசூலிக்கப்பட்டுள்ளது.

4. அறக்கட்டளையின் சொத்திலிருந்து ஆண்டுதோறும் ரூ. 2,32,50,000/- குத்தகையாக வசூலிக்கப்பட்டுள்ளது.

5. ரூ. 6 கோடி மதிப்புள்ள குடியிருப்பாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலங்களில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட சட்டப்பிரிவு 78ன் கீழ் உத்தரவிடப்பட்டுள்ளது.

6. மாமல்லபுரத்தில் அமைந்துள்ள ஆளவந்தார் நாயக்கரின் திருவரசினை மேம்படுத்தும் பணி ரூ. 7.6 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

7. திவ்யப்பிரபந்த பாடசாலை ரூ. 90 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் கோரி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

8. திருக்குலம் ரூ. 27 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டு வருகிறது.

9. மாமல்லபுரம் அருள்மிகு ஸ்தல சயன பெருமாள் திருக்கோயிலில் ரூ. 1 லட்சம் செலவில் கட்டளையின் ரூ. 7 லட்சம் செலவில் அன்னதானமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

10. திருவிடந்தை அருள்மிகு நித்திய கல்யாணப் பெருமாள் திருக்கோவிலில் ரூ. 1லட்சம் செலவில் கட்டளையையும் ரூ. 3.5 லட்சம் செலவில் அன்னதானமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

11. திருமலை திருப்பதி அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோவிலில் ரூ. 10,000 செலவில் கட்டளையும் ரூ. 3.5 லட்சம் செலவில் அன்னதானமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 60 ஏக்கர் நிலங்களை குத்தகைக்கு விட செயல் அலுவலரால் 01.072023 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு 08.07.2023 அன்று திரும்ப பெறப்பட்டுள்ளது. மேலும் பரத முனிவர் பண்பாட்டு மையம் அமைப்பதற்கு அரசு நிலமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அறக்கட்டளை நிலங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆளவந்தான் நாயக்கரின் விருப்பப்படி அனைத்து தர்மங்களும் விதிகளின்படி முறையாக செயல்பட்டு வருகின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என அந்த கடிதத்தில் விளக்கம் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sekarbabu reply DrRamadas regarding withdrawal alavanthar naykar trust land lease


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->