சிறையில் இருந்து வெளிவந்த செந்தில் பாலாஜி - அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை.! - Seithipunal
Seithipunal


அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். பலமுறை ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. 

இந்த நிலையில், இன்று உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். சிறையில் இருந்து 471 நாட்கள் கழித்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறை வாசலில் ஆர்.எஸ். பாரதி வரவேற்றார்.

இதைத் தொடர்ந்து அவருக்கு திமுக தொண்டர்கள், ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பலத்த வரவேற்புடன் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

பின்னர் மெரினா கடற்கரைக்குச் சென்ற செந்தில் பாலாஜி அங்குள்ள அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தி விட்டுச் சென்றார். q


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

senthil balaji respect anna and karunanithi memorable place in merina


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->