டாஸ்மாக் ரூ.708 கோடி தீபாவளி வசூல்! எச்சரிக்கை விடுத்த செந்தில் பாலாஜி!
Senthil Balaji take Legal action for spreading false news about Tasmac
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விற்பனை ஒவ்வொரு ஆண்டும் சாதனை படைத்து வருகிறது. அதன் படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் மூன்று நாட்கள் மது விற்பனைக்காக கடைகளில் மதுபானங்கள் அதிகளவில் இருப்பு வைக்கப்பட்டது.
கடந்த அக். 22 ம் தேதி தமிழகத்தில் ரூ. 205.42 கோடிக்கும், அக். 23 ம் தேதி 258.79 கோடிக்கும் விற்பனையானதாக தகவல்கள் வெளியாகின. இதேபோன்று நேற்று தமிழகத்தில் ரூ.244.08 கோடிக்கு மது விற்பனையானதாக தெரியவந்தது. கடந்த மூன்று தினங்களில் மட்டும் தமிழகத்தில் ரூ.708.29 கோடிக்கு மது விற்பனையானதாக தற்பொழுது செய்திகள் வெளிவந்தன.
இந்த நிலையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகத்தில் மது விற்பனை குறித்தான செய்திகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொய் செய்திகள் பரப்பினால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தி வெளியிட்ட பிரபல செய்தி நிறுவனத்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் "டாஸ்மாக் நிர்வாகத்திடம் கூட முழு விவரம் வராத நிலையில் பொதுமக்களிடம் மது விற்பனை விவரம் என பொய்யான தகவல்களைச் சேர்க்கிறீர்கள். உண்மையிலேயே நெறிமுறையற்றது. தவறான செய்திகளை பரப்பி அரசுக்கு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
Senthil Balaji take Legal action for spreading false news about Tasmac