செந்தில்பாலாஜிக்கு இடியாய் வந்த செய்தி! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
Senthilbalaji case 30 july 2024
திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர், எம்எல்ஏ செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 51 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டவிராத பண பரிமாற்ற வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம், 14ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.
தற்போது புழல் சிறையில் இருந்து வரும் செந்தில் பாலாஜிக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்காத நிலையில், அவர்களுடைய ஜாமீன் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நேற்று புழல் சிறையில் இறந்தபடியே காணொளி காட்சி மூலமாக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அள்ளி முன்பாக செந்தில்பாலாஜி ஆஜர் படுத்தப்பட்டார்.
இதனை தொடர்ந்து இன்று அவரின் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி ஆணை பிறப்பித்துள்ளார். 51 வது முறையாக அவரின் காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளி வைக்க செந்தில் பாலாஜி மனு அளித்திருந்த நிலையில், இந்த மனுவை சென்னையில் முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி இதற்காக செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Senthilbalaji case 30 july 2024