#BREAKING: கடைசி நேரத்தில் அதிர்ச்சி! கிரீன் சிக்னல் கொடுத்த அமலாக்கத்துறை! வாட்டி வதைக்கும் நீதிபதி கார்த்திகேயன்!
Senthilbalaji Case Last Minitel change
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பிரதான வழக்கும், அமலாக்கத்துறையின் வழக்கும் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
இதில், நீதிமன்ற காவலை நீட்டிக்க கூடிய வழக்கில், நடவடிக்கையை நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதி கார்த்திகேயன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியை பிணையில் விடுவிக்க ஆட்சேபம் இல்லை என்று, அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
அதே சமயத்தில், பிணை உத்தரவாதங்களில் சந்தேகம் உள்ளதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் விசாரணை நடத்தினார்.
குறிப்பாக, பிணை வழங்க பிணைதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் உறவினர்கள் தியாகராஜன், சிவப்பிரகாசம் ஆகியோரின் வயது 60. ஆனால், செந்தில் பாலாஜியை இவர்களுக்கு 69 வருடங்களாக தெரியும் என்று எப்படி கூற முடியும் என்ற நீதிபதி கார்த்திகேயன் கேள்வி எழுப்பினார்.
பின்னர் ஆய்வுக்குப்பின் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் நிபந்தனையாக விதிக்கப்பட்ட இரு நபர் உத்தரவாத பிணையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்றது.
இன்னும் சற்று நேரத்தில் அவர் ஜாமினில் வெளியே வருவது ஆவது குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.
English Summary
Senthilbalaji Case Last Minitel change