சரணடையும் அசோக்குமார்! வெளியான பரபரப்பு தகவல்!
Senthilbalaji ED Case Ashok kumar info
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், விரைவில் அமலாக்கத்துறை முன்பு சரணடைவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் மாதம், 14ஆம் தேதி திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை சட்டவிரத பண பரிமாற்றம் வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
கடந்த வாரம் செந்தில்பாலாஜியை ஐந்து நாட்கள் காவலில் எடுத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அவரிடம் சுமார் 200க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டதாகவும், அமலாக்கத்துறை அதிகாரிகளின் ஒரு சில கேள்விகளுக்கு, "தனக்கு விவரம் எதுவும் தெரியாது. தனது சகோதரர் அசோக்குமாருக்கு தான் அது குறித்த தகவல் தெரியும்" என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து நான்கு முறை அசோக்குமாருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
தனக்கு நெஞ்சுவலி இருப்பதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று, அசோக் குமார் கோரிக்கை விடுத்தார். அதன்படி நான்கு வாரம் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், அமலாக்கதுறையின் குற்றப்பத்திரிகை நகலை பெற்ற பின்னர், அசோக்குமார் நேரில் சரண் அடைவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
English Summary
Senthilbalaji ED Case Ashok kumar info