அமைச்சர் செந்தில்பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற முடிவு?! பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


இன்று அதிகாலை திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு நுங்கப்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வரும் வழியில், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கத்தி, கதறி அழுது கூச்சலிட்டார்.

அப்போது மத்திய துணை இராணுவ பாதுகாப்பு படையினர் அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சோதனை நடத்தப்பட்டதில், அவருக்கு இதய ரத்தக் குழாய்களில் மூன்று இடங்களில் அடைப்பு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், அவருக்கு உடனடியாக இன்றே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரை செய்தது. 

இதற்கிடையே, அமலாக்கத்துறை சார்பில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து மத்திய அரசின் இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர்கள் ஆய்வு செய்ய ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்தனர்.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து 4 மூத்த மருத்துவர்களின் ஆய்வு நிறைவு அடைந்துள்ளது.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையின் இருதயவியல் துறை சார்ந்த மருத்துவர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டு உள்ளனர்.

இந்த ஆய்வு அறிக்கையினை இஎஸ்ஐ மருத்துவமனை முதல்வரிடம் மருத்துவர்கள் குழு வழங்கவுள்ளனர். 

இந்த நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தனியார் மருத்துவமனையானகாவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்காக அவர் அந்த மருத்துவமனைக்கு இன்னும் சற்று நேரத்தில் மாற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SenthilBalaji ESI Doctors report ready


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->