த.வெ.க மாநாடு - பெண்களுக்கு தனி பகுதி..!! - Seithipunal
Seithipunal


நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டை அறிவித்துள்ளார். அதன் படி இந்த முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை மாலை நான்கு மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், இந்த மாநாட்டின் அம்சங்கள் குறித்து பாதுகாப்பு மேலாண்மை குழு தெரிவித்துள்ளதாவது;-

1. மாநாட்டில் பெண்களுக்கு என்று தனியாக ஒரு பகுதியும், மாற்றுத்திறனாளிகளை பாதுகாப்பாக அழைத்து வந்து அமர வைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

2. மாநாட்டிற்கு வருவோரின் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. எவ்வளவு வாகனங்கள் வந்தாலும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பார்க்கிங் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

3. மாநாட்டில் ஒரு லட்சம் பேருக்கு மேல் வந்தாலும் அமர்ந்து பார்க்கும் வகையில் இருக்கைகளும், அவர்களுக்கான உணவுகளும் தயார் செய்யப்படுகிறது.

4. பெண்கள் வீட்டில் எவ்வளவு பாதுகாப்பாக இருப்பார்களோ அதைவிட இந்த மாநாட்டு திடலில் பாதுகாப்பை அளிப்போம். மகளிருக்கான பாதுகாப்பிற்கு மகளிர் அணியை சேர்ந்தவர்களை வைத்தே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

separate section to womens in tvk conference


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->