தமிழ்த்தாய் வாழ்த்து பாட ஒத்திகை எடுப்பதும் முக்கியம் - ஜி.கே.வாசன்! - Seithipunal
Seithipunal


அண்மையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்ற ஹிந்தி மாத விழாவில், "தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல்திருநாடும்" என்ற வரியை தவிர்த்து பாடினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

தொடர்ந்து துணை முதலமைச்சர் பங்கேற்ற விழாவில், கண்டமிதில் என்பதை கண்டமதில் என்றும், இரண்டாவது முறை பாடும் போது புகழ் மணக்க என்பதை திகழ் மனக்க என்று பாடியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய கீதம் இந்தியாவிற்கு எப்படி பெருமை சேர்க்கிறதோ அதே போல தமிழ்த்தாய் வாழ்த்தும் தமிழகத்திற்கு பெருமை சேர்க்கிறது. இதனுடைய வரிகள், உச்சரிப்பு பாடும் போது மிக முக்கியம். இதில் பிழை என்பதே வரும் நாட்களில் எந்த விழாக்களிலும் இருக்கக்கூடாது. தேவைப்பட்டால் இதற்குண்டான ஒத்திகை எடுப்பதும் முக்கியம். தமிழ்த்தாய் வாழ்த்தில் அரசியல் கூடாது.

இதனுடைய நோக்கமே தமிழ்நாடு, தமிழ்வளர்ச்சி, தமிழ்பற்று. இதில் தவறு கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆதாயத்திற்கும், விளம்பரத்திற்கும் மட்டுமே இருக்கக்கூடும். தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் பாடல்கள் என்பதால் சரியாகப் பாட வேண்டும் என்பதையே குறிக்கோளாகக்கொண்டு செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rehearsing tamil thai greetings is also important gk vasan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->