7 அடி உயரத்தில் சிவலிங்கம் : நத்தமேடு அகழ்வாய்வு பணியில் கிடைத்த அதிசயங்கள்.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியை அடுத்த நத்தமேட்டில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 7 அடி உயரத்தில் சிவலிங்கம் ஒன்று மண்ணில் புதைந்த நிலையில் இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.

பின்னர் இது குறித்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் நத்தமேடு பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கி.மு. 300 முதல் கி.பி. 300-ம் ஆண்டில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய பானை ஓடுகள் மற்றும் கற்கள் கிடைத்தன. 

இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில்  தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் அகழ்வாய்வு பணி நடைபெற்றது. அப்போது பழங்கால கட்டிட சுவர்கள். மற்றும் அரியவகை பொருட்களான கண்ணாடி மணிகள், வட்ட சில்கள், இரும்பு பொருட்கள், கூர்மையான ஆயுதங்கள் போன்ற பொருட்கள் கிடைத்துள்ளன. 

இந்த அகழ்வாய்வு பணி முழுமையாக முடிவடைந்தால்தான் என்னென்ன வகை பொருட்கள் கிடைத்துள்ளது என்பது குறித்து மேலும் தெரியவரும் என்று தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shiva lingam and more found at Nathamedu excavation


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->