அதிர்ச்சி!...தஞ்சை பெரிய கோவிலில் தமிழ் கல்வெட்டுகளை அழித்து இந்தி திணிப்பு?...தகவல் சரிபார்ப்பகம் பரபரப்பு விளக்கம்!
Shock tamil inscriptions destroyed in thanjavur big temple and imposed in hindi information checker exciting explanation
உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் அழிக்கப்பட்டு, இந்தி மொழியிலான கல்வெட்டுகள் வைக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. மேலும், தமிழ் கல்வெட்டுகளை அழித்த அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற வீடியோ ஒன்று, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து, தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ முற்றிலும் பொய்யானது என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாகவும், அப்போதே இந்திய தொல்லியல் துறை இதற்கு மறுப்பு தெரிவித்திருந்ததாக குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக, மராட்டியர் ஆட்சிக்காலத்தில் கோவிலில் பதிக்கப்பட்ட தேவநாகரி வரி வடிவ கல்வெட்டுகளை இந்தி எழுத்துக்கள் என்று தவறாக திரித்து வீடியோ வெளியிடப்பட்டு உள்ளதாக தொல்லியல் துறை அதிகாரி விளக்கம் அளித்திருந்ததை சுட்டிக்காட்டியுள்ள தகவல் சரிபார்ப்பகம் வதந்தியை பரப்பவேண்டாம் என்று தெரிவித்துள்ளது.
English Summary
Shock tamil inscriptions destroyed in thanjavur big temple and imposed in hindi information checker exciting explanation