வேளச்சேரியில் அதிர்ச்சி சம்பவம் : ஓராண்டாக புகையிலை, குட்கா விற்ற நபர் கைது!....230 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்!
Shocking incident in Velachery A person who sold tobacco and gutka for a year was arrested 230 kg of tobacco products were seized
சென்னை வேளச்சேரியில் புகையிலை, குட்கா, பான்மசாலா பொருட்களை விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 230 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
சென்னை வேளச்சேரியில் இன்ஸ்பெக்டர் விமல் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். மேலும், அவர் பெரிய பையுடன் வந்திருந்ததை அடுத்து, அவற்றை சோதனை செய்தபோது அந்த பையில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்தது அதே பகுதி பெரியார் நகரை சேர்ந்த முகமது அலிஜின்னா என்பது தெரிய வந்ததையடுத்து, அவரது வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் மூட்டை, மூட்டையாக குட்கா, புகையிலை பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அவர், வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வெளி மாநிலங்களில் இருந்து தடைசெய்யப்பட்ட, புகையிலை, குட்கா, பான்மசாலா, உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்து பதுக்கி வைத்து வேளச்சேரி, ஆதம்பாக்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து முகமது அலிஜின்னாவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 230 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
English Summary
Shocking incident in Velachery A person who sold tobacco and gutka for a year was arrested 230 kg of tobacco products were seized