மதுரை அருகே அதிர்ச்சி சம்பவம் : கடனால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் எடுத்த விபரீத முடிவு!
Shocking incident near Madurai 5 members of the same family took a tragic decision due to debt
மதுரை மாவட்டம், திருமங்கலம் அடுத்த ஊராண்ட உரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பால் பாண்டி, சிவஜோதி என்ற தம்பதிக்கு ஜனார்த்தனன், தர்ஷனா மற்றும் தர்ஷிகா என 3 குழந்தைகள் உள்ளது.
இந்த சூழலில் பால்பாண்டி சொந்தமாக வியாபாரம் செய்வதற்காக இரண்டு தனியார் வங்கிகளில் தனது மனைவி சிவஜோதி பெயரில் ரூ.8 லட்சம் மற்றும் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் என கடன் வாங்கி உள்ளனர். இதையடுத்து இந்த பணத்தில் சிவஜோதி என்ற பெயரில் ஊராண்ட உரப்பனூரில் ஊறுகாய் கம்பெனி நடத்தி வந்தனர்.
இதற்கிடையே வாங்கிய கடனை முறையாக செலுத்தி வந்த நிலையில் ரூ.2,40,000 கடன் பெற்ற தனியார் வங்கிக்கு முறையாக தவணைத்தொகையை செலுத்தவில்லை என கூறி ஊழியர்கள் கடந்த 10-ந்தேதி வீட்டிற்கு வந்து கேட்டு, தம்பதியை சரமாரியாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செல்போனில் அவ்வப்போது திட்டியதோடு பணத்தை செலுத்தவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுப்பதாக மிரட்டி உள்ளனர். தொடர்ந்து பணத்தை திரும்ப செலுத்த பல இடங்களிலும் பணம் கேட்டும் கிடைக்காததால் மனவிரக்தி அடைந்த பால்பாண்டி உரக்கடையில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் குருணை மருந்தை தண்ணீரில் கலந்து குடித்த நிலையில், ஒரு சில விநாடிகளில் அனைவரும் மயங்கி உள்ளனர்.
இன்று காலை 5 பேரும் பேருக்கும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து தகவல் இருந்த திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Shocking incident near Madurai 5 members of the same family took a tragic decision due to debt