சிங்கம்புணரி : இருசக்கர வாகனத்தில் புகுந்த விஷப் பாம்பு., ஒன்று கூடிய பொதுமக்கள்.!
singampunari bike snake
சிங்கம்புணரி அருகே இருசக்கர வாகனத்தில் புகுந்த விஷப் பாம்பை பொதுமக்கள் ஒன்று அடுத்து கொலை செய்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேருந்து நிலையம் அருகே, இருசக்கர வாகனத்தில் இருந்த பாம்பை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்தனர்.
சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த அந்த இருசக்கர வாகனத்தில் பாம்பு ஒன்று புகுந்தது. இதனை இரு சக்கர வாகனத்தின் உரிமையாளர் பார்த்துள்ளார்.
அந்த பாம்பு விஷப்பாம்பு என்பதால், அருகில் நின்று கொண்டிருந்த பொதுமக்களை உதவிக்கு அழைத்தார். அப்போது இரு சக்கர வாகனத்தை கீழே சாய்த்து விட்டு, இரு சக்கர வாகனத்தின் இருக்கையை கழட்டிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்து உள்ளனர்.
வாகனத்தின் அதிர்வால் அந்த விஷப் பாம்பு வெளியே வந்தது. வெளியே வந்த பாம்பை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கையில் வைத்திருந்த கட்டையால் அடித்து படுகொலை செய்தனர்.
இதுகுறித்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பாம்புகளை அடித்துக் கொலை செய்வது குற்றம் ஆகும்.
உங்களுடைய இருப்பிடத்தில் அல்லது உங்கள் வாகனத்தில் பாம்பு நுழைந்தால் அதனை நீங்கள் அடித்துக் கொலை செய்யக் கூடாது. உடனடியாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நாங்கள் அதனை பாதுகாப்பாக வனத்தில் விடுவதற்கு ஏற்பாடு செய்வோம்" என்று அந்த வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.