சிவகாசி வெடிவிபத்து : இறந்தவர்கள் குடும்பத்திற்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்!! - Seithipunal
Seithipunal


சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டி தேதிமுக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை அறிக்கை வெளிட்டுள்ளார். அறிக்கையில் அவர் குறிவுள்ளதாவது,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கலம்பட்டியில் பட்டாசு வெடி விபத்தில் 5 பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் அறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன். தொடர்ந்து இதுபோன்று பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துக்கள் நடப்பது வாடிக்கையான நிகழ்வாகவே நடந்து கொண்டிருக்கிறது. இதை தமிழக அரசு உடனடியாக ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு கொடுத்து, வீட்டில் ஒருவருக்கு வேலையும் தரவேண்டும்.

தேமுதிக சார்பாக விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம். அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். மேலும் இதுபோன்ற விபத்துகள் இனி தொடர்ந்து நடக்காத வண்ணம் முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து, இனிமேலும் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து நடக்காத வண்ணம் அரசு ஆய்வு செய்து விபத்துக்களை தடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று கூறிவுள்ளார்.

 

--


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakasi blast Compensation to bereaved families and government jobs Premalatha Vijayakanth


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->