சிவகாசியில் பட்டாசு அமோகமாக சேல்ஸ்! வாங்க குவியும் வெளிமாவட்ட மக்கள்: விற்பனையாளர்கள் மகிழ்ச்சி! - Seithipunal
Seithipunal


சிவகாசி: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், தமிழகம் முழுவதிலிருந்தும் மக்கள் பட்டாசு வாங்குவதற்காக சிவகாசிக்கு வருவதால், விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள பட்டாசு ஆலைகளில் வருடம் முழுவதும் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவின் பல பகுதிகளில் பட்டாசு தயாரித்தாலும், சிவகாசி பட்டாசுகளுக்கு தனியான மதிப்பு உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. 

சிவகாசியில் 2,500-க்கும் மேற்பட்ட நிரந்தர உரிமம் பெற்ற பட்டாசு விற்பனை கடைகள் உள்ளன. விதிமுறைகள் மற்றும் போக்குவரத்து கட்டணக் காரணமாக பிற மாநிலங்களில் விற்பனை செய்யப்படும் பட்டாசுகளின் விலைகள் அதிகமாக இருக்கும். ஆனால், சிவகாசியில் உள்ள பட்டாசு கடைகளில் 50 முதல் 75 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இது மட்டும் இல்லாமல், மக்கள் பட்டாசுகளை நேரில் வெடித்து பார்த்து வாங்கலாம் என்பதால் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் மக்கள் நேரடியாக சிவகாசிக்கு வந்து பட்டாசு வாங்க விரும்புகின்றனர்.

இதற்கிடையில், தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ளதால், பட்டாசு வாங்குவதற்காக வெளியூர் மக்கள் சிவகாசிக்கு அதிக அளவில் வருவதால், விற்பனையாளர்கள் தங்கள் விற்பனையில் திருப்தியடைந்துள்ளனர். 

பட்டாசு மொத்த விற்பனையாளரான ராஜேஷ் கூறுகையில், "ஆடிப்பெருக்கைத் தொடர்ந்து தீபாவளி விற்பனை தொடங்கியது. தொடக்கத்தில் ஆர்டர்கள் குறைவாக இருந்தாலும், ஆயுத பூஜையால் விற்பனை சூடுபிடித்தது. வடமாநிலங்களுக்கான பட்டாசுகள் ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டதால், இந்த 10 நாட்கள் முழுக்க உள்ளூர் வியாபாரமே முக்கியமாக இருக்கும். வெளிமாவட்ட மக்கள் வருவதால் விற்பனை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் சில பேன்சி ரக பட்டாசுகளுக்கு இப்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது," என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakasi firecracker sales are huge Out of district people flock to buy sellers are happy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->