பெரும் சோகம்! சிவகாசி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் த*கொலை! - Seithipunal
Seithipunal


சிவகாசி அருகே திருத்தங்கல் பகுதியில் கடன் நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர் தம்பதியான லிங்கம், பழனியம்மாள் இருவரும் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் மகள், மகன் மற்றும் மகள் வயிற்றுப் பேத்தியான 2 மாத பச்சிளம் குழந்தை மூவரும் விஷம் அருந்திய நிலையில் சடலமாக கண்டெக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் தம்பதிக்கு ரூ.3 கோடி வரை கடன் இருந்ததாகவும், இதனால் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கைப்பற்றப்பட்ட உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இவர்களின் மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஒரு அண்மை செய்தி : கடலூர் அரசு மருத்துவமனையில் நின்று கொண்டிருந்த ஆம்புலன்சை இயக்கிய சிறுவனால் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நோயாளியை இறக்கி உள்ளே அழைத்துச் சென்ற நேரத்தில், அங்கிருந்த சிறுவன் வாகனத்தில் ஏறி இயக்கியுள்ளார். அப்போது முன்னே நடந்து சென்ற இரு பெண்கள் மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், இரு பெண்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakasi One family suicde case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->