சென்னை விமான நிலையத்தில் 6 கிலோ போதைப்பொருள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அவ்வப்போது தங்கம், போதைப்பொருள், அரியவகை உயிரினங்கள் உள்ளிட்டவற்றை கடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன் படி, பாங்காngகில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்திறங்கிய பயணிகளிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது வடமாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சுற்றுலா பயணியாக தாய்லாந்து நாட்டிற்கு சென்று திரும்பி வந்தார். 

அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்ததில் 14 பார்சல்கள் இருந்தது தெரியவந்தது. அதில் காலிபிளவர் மற்றும் காளான் ஆகியவற்றின் இடையே உயர்ரக பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப்பொருள் இருந்தது தெரிய வந்தது. 

சுமார் ஆறு கிலோ எடை கொண்ட அந்த உயர்ரக கஞ்சாவின் மதிப்பு ரூ.6 கோடி என்று தெரியா வந்தது. இதையடுத்து போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கடத்தி வந்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six kilo drugs seized in chennai airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->