எச். ராஜா குற்றவாளி - அவதூறு வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு.!
six months jail penalty to h raja
பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா குற்றவாளி என்றும் அதனால் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு பெரியார் சிலையை உடைப்பேன் என்று கருத்து தெரிவித்தது, கனிமொழி எம்.பி.க்கு எதிராக விமர்சனம் செய்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரிய எச்.ராஜா மனு அளித்தார்.
இந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் மூன்று மாதங்களில் வழக்கின் விசாரணையை முடிக்க எம்.பி. எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு குறித்த விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில், எச்.ராஜாவுக்கு எதிராக காவல்துறை தரப்பில் குற்றச்சாட்டுக்கள் நிருபிக்கப்பட்டுள்ளன.
இரு பதிவுகளும் எச்.ராஜாவின் சமூக வலைதள பக்கத்திலிருந்து பதிவு செய்யப்பட்டது என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கிறது. ஆகவே இந்த வழக்கில் எச்.ராஜா குற்றவாளி என்றும் அவருக்கு ஆறு மாத சிறைதண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
six months jail penalty to h raja