திமுக எம்.பிக்கள் கூட்டம் - 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்.! - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது, 2025-26 நிதி ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட் குறித்தும், திமுக எம்பிக்கள் பட்ஜெட் கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்பட வேண்டும்? என்பது குறித்தும் பல்வேறு ஆலோசனைகளை எம்.பி.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதாவது:-

* அரசின் கோப்புகள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திட கால நிர்ணயம் செய்திட பாராளுமன்றத்தில் தி.மு.க. வலியுறுத்தும்.

* ஆளுநர் பதவியை நீக்கும் வரை, அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தை காக்க நடத்தை விதி உருவாக்க வேண்டும்.

* டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வைத்த முதல்வருக்கும் துணை நின்ற மக்களுக்கும் நன்றி.

* சிறுபான்மையினரின் நலனை பாதிக்கும் வக்பு சட்ட திருத்த மசோதாவை நிறைவேற்றத் துடிக்கும் பா.ஜ.க. அரசுக்கு கண்டனம்.

* மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த முறை தமிழகத்திற்கு திட்டங்களை அறிவிக்க வேண்டும். புதிய ரெயில்வே திட்டங்கள், பேரிடர்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும்.

* யுஜிசி வரைவு அறிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தி பிப்ரவரி 2-ந்தேதி டெல்லியில் போராட்டம் நடைபெறும். டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் தி.மு.க. எம்.பி.க்களும் பங்கேற்பார்கள்" உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

six resolution passing in dmk mps meeting


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->