#ஈரோடு || மின்சாரம் பாய்ந்து 6 வயது சிறுமி உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்து 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானி லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களது மகள் சுதேசனா (வயது 6).

இந்நிலையில் சம்பவத்தன்று சுதேசனா அருகில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது ஆட்டுக்கொட்டாயில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி அங்கிருந்தே இரும்பு பைப்பை பிடித்துள்ளார். அதில் மின்சாரம் தாக்கி சிறுமி சுதேசனா கீழே மயங்கி விழுந்துள்ளார்.

இதையடுத்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு மேல் சிகிச்சைக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். 

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சித்தோடு காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

six year old Girl dies due to electrocution in erode


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->