பொதுக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் புதிய வாக்காளர் அடையாள அட்டை.!
sixteen lakhs new votter id card in tamilnadu Chief Electoral Officer Satyapratha Sahu info
தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, "புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் பதினாறு லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த புதிய வாக்காளர் அடையாள அட்டை, முதற்கட்டமாக தற்போது நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு வழங்கப்படும். அதேபோல், பழைய வாக்காளர் அடையாள அட்டையை வைத்திருப்பவர்கள் புகைப்படம் உள்ளிட்டவற்றை மாற்றி புதிய அட்டையை பெறலாம்.
இதில், க்யூஆர் கோடு வசதியுடன் மிகச்சிறிய எழுத்து இடம்பெறும் வகையில் பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய புதிய வடிவிலான வாக்காளர் அடையாள அட்டை வெளியிடப்பட உள்ளது.
இதுவரைக்கும் வாக்காளர் அட்டைக்கு வெளியே ஒட்டப்பட்ட 'ஹோலோகிராம்' இனி அட்டைக்குள்ளையே ஒட்டப்படும். இந்த அட்டையின் முன்புறம், வாக்காளரின் புகைப்படம் மற்றும் அவருடைய 'நெகட்டிவ் இமேஜ்' உள்ளிட்ட படமும் இடம்பெறும்.
இனிமேல் எந்த நிலையிலும் போலியான வாக்காளர் அடையாள அட்டைகள் உருவாக்க முடியாத வகையில் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
sixteen lakhs new votter id card in tamilnadu Chief Electoral Officer Satyapratha Sahu info