மாருதி எர்டிகா 2025: 7 பேர் ஜம்முனு போகலாம்!குறைந்த விலையில் கிடைக்கும் சிறந்த 7-சீட்டர் எம்பிவி! முழு தகவல்!
Maruti Ertiga 2025 7 people can go to Jammu Best 7 seater MPV available at a low price
இந்தியாவில் 7-சீட்டர் கார்களுக்கு எப்போதும் அதிகமான தேவை உள்ளது. குறிப்பாக, குடும்ப பயணங்களுக்கு ஏற்ற மாதிரியாக மாருதி சுசுகி எர்டிகா பலரின் விருப்பமாக உள்ளது. அதன் விலை, எரிபொருள் சிக்கனம், வசதிகள் போன்றவை இதற்குக் காரணம். 2025 மாடலாக வரும் புதிய எர்டிகா, மேலும் சில புதிய அம்சங்களுடன் களமிறங்கியுள்ளது.
விலை மற்றும் எஞ்சின் திறன்
புதிய எர்டிகா மாடலின் ஆரம்ப விலை ₹8.84 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். இதில் 1.5 லிட்டர் K15C சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. இது 102 bhp பவரையும், 136.8 Nm டார்க்கையும் வழங்கும். 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர்பாக்ஸ் விருப்பமாக உள்ளது.
மைலேஜ் மற்றும் செயல்திறன்
மாருதி எர்டிகா மைலேஜில் எப்போதும் சிறப்பாக உள்ளது. புதிய மாடலில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 20.51 முதல் 22.30 கிமீ வரை மைலேஜ் கிடைக்கும். மேலும், CNG வேரியண்ட் 26.11 km/kg மைலேஜ் வழங்கும்.
உள்புற வசதிகள்
-
7-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட்
-
ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு
-
பவர் அட்ஜஸ்டபிள் ஓஆர்விஎம்
-
மேமரி பேக்கப் கொண்ட புஷ்-ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன்
-
ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, 2025 எர்டிகாவில் இரட்டை ஏர்பேக்குகள், ஏபிஎஸ், EBD, ISOFIX குழந்தை இருக்கை வசதி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ESP போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
குடும்ப பயணங்களுக்கு மலிவான விலையில் சிறந்த எம்பிவியாக எர்டிகா நீண்ட காலமாக இருக்கிறது. 2025 மாடல் கூடுதல் வசதிகளுடன் வந்துள்ளதால், இந்த மாடலின் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீங்கள் ஒரு பெரிய குடும்ப கார் தேடுகிறீர்களானால், புதிய எர்டிகா சிறந்த தேர்வாக இருக்கும்.
English Summary
Maruti Ertiga 2025 7 people can go to Jammu Best 7 seater MPV available at a low price