மகன் ஆத்விக்கிற்கு ரேஸ் கார் ஓட்ட பயிற்சியளிக்கும் அஜித்குமார்; வைரலான வீடியோ..!
Ajith Kumar trains his son Aadvik to drive a race car viral video
நடிகர் அஜித்குமார் இந்த ஆண்டு தொடக்கத்தில் துபாயில் நடந்த கார் பந்தய போட்டியில் அவரது அணி 03-ஆம் இடம் பிடித்து அசத்தியது. இத்தாலியில் நடைபெறவுள்ள 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் தகுதி சுற்றில் அஜித்குமார் பங்கேற்ற ரேஸிங் அணி 03-ஆம் இடம் பிடித்தது.
இந்நிலையில், கார் பந்தயங்களை முடித்துக்கொண்டு, அஜித் சென்னை திரும்பியுள்ளார். தற்போது, அஜித்தை போன்று அவருடைய மகன் ஆத்விக்கும் கார் பந்தயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த கால்பந்தாட்ட நட்சத்திரம் ரொனால்டினோவை சந்தித்து வாழ்த்தும் பெற்றார்.
இந்நிலையில், மகன் ஆத்விக்கிற்கு சென்னையை அடுத்துள்ள இருங்காட்டு கோட்டையில் உள்ள கார்பந்தய ட்ராக்கில் அஜித் ரேஸ் கார் ஓட்டுவதற்கு கற்றுக் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
English Summary
Ajith Kumar trains his son Aadvik to drive a race car viral video