கருணாநிதி குறித்து அவதூறு கருத்து : சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அவதூறாகப் பேசியது உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் தொடக்கத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பாடல் பாடிய சாட்டை துரைமுருகன் என்ற நாம் தமிழர் கட்சி உறுப்பினரின் பேச்சு கிளப்பியது.

சாட்டை துரைமுருகன் பாடல் குறித்து சீமான், “அதே பாடலை நானும் பாடுகிறேன். காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கிறது என்று பார்க்கிறேன்,” என கூறி அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனால் கரூர் மாவட்டம் தாந்தோணிமலை காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் கடந்த ஆகஸ்ட் மாதம் புகார் அளித்தார். 

விசாரணையை அடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, தாந்தோணிமலை காவல் நிலையத்தில் சீமான் மீது அவதூறாகப் பேசி இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேச்சுகளை இணைய தளத்தில் வெளியிட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் கூறுகையில், சீமான் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Slanderous comment on Karunanidhi Seeman booked under 2 sections


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->