ஓடும் ரயிலில் பயணியைக் கடித்த பாம்பு - தீவிர சோதனையில் ஊழியர்கள்.! - Seithipunal
Seithipunal


மதுரையிலிருந்து குருவாயூருக்கு தினசரி விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 11:20 மணிக்கு புறப்படும் இந்த ரயில்  மறுநாள் அதிகாலை 2.10 மணிக்கு குருவாயூரை சென்றடைகிறது. அதன் பிறகு காலை அங்கிருந்து புறப்படும் இந்த ரெயில், அன்று இரவே மதுரைக்கு வந்துவிடும்.

அதன் படி, இந்த ரயில் நேற்று வழக்கம் போல் கேரளாவில் இருந்து மதுரையை நோக்கி வந்துகொண்டிருந்தபோது ஆறாவது பெட்டியில் பயணம் செய்த கார்த்தியை பாம்பு கடித்துள்ளது. இதை அடுத்து, ரயில் உடனடியாக எட்டுமானூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, கார்த்திக் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அதன் பின்னர் ரயில்வே ஊழியர்கள் மற்றும் போலீசார் உதவியுடன் அந்த ரயில் பெட்டியில் இருந்த அனைத்து பயணிகளும் கீழே இறக்கிவிடப்பட்டு, தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் பாம்பு எதுவும் கண்டறியப்படாததால், கடித்தது பாம்பா? அல்லது எலியா? என்ற சந்தேகம் உள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். 

இருப்பினும், ரெயில்வே ஊழியர்கள் மற்றும் போலீசார் தொடர்ந்து ரயில் பெட்டியின் அனைத்து கதவுகளையும் மூடி அந்த பெட்டி ரயிலில் இருந்து பிரித்து மற்ற பெட்டிகள் அனைத்தும் இணைக்கப்பட்டு ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

snake bite to passenger in madurai train


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->