அரசு பேருந்தில் பயணம் செய்த பாம்பு - திருப்பத்தூர் அருகே பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து நேற்று முன்தினம் காலை அரசு பேருந்து ஒன்று 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தர்மபுரி நோக்கி சென்று கொண்டிருந்தது. அதன் படி இந்தப் பேருந்து குனிச்சி அருகே பள்ளாளப்பள்ளி கூட்ரோடு பகுதியில் சென்ற போது திடீரென பேருந்தின் நடுப்பகுதியில் உள்ள ஒரு சீட்டில் புஸ், புஸ் என்று ஒரு சத்தம் கேட்டது.

உடனே பயணிகள் சத்தம் வந்த இடத்தில் பார்த்தபோது பாம்பு ஒன்று இருப்பது தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் பாம்பு, பாம்பு என்று சத்தம் போட பேருந்தில் இருந்த சக பயணிகள் பேருந்தை நிறுத்தும்படி சத்தமிட்டனர்.

உடனே பேருந்து ஓட்டுநர் பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். உடனே பயணிகள் முண்டியடித்துக்கொண்டு பேருந்தில் இருந்து இறங்கி பாம்பு, பாம்பு என்று கத்திக் கூச்சல் போட்டனர். பயணிகளின் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்த சில இளைஞர்கள் கம்புடன் பேருந்துக்குள் ஏறி பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது பாம்பு ஒரு இருக்கையின் அடியில் பதுங்கி இருந்ததை பார்த்த இளைஞர்கள் அதனை அடித்து பேருந்தில் இருந்து கீழே கொண்டு வந்து சாலையில் போட்டு கொன்றனர். அதன்பிறகே பயணிகள் பேருந்தில் ஏறினர். இதைத்தொடர்ந்து பேருந்து தர்மபுரிக்கு புறப்பட்டு சென்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

snake found govt bus seet in thirupathur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->