சூரிய கிரகணம் : உணவு சாப்பிட்ட திராவிட கழக கர்ப்பிணி பெண்கள்.!  - Seithipunal
Seithipunal


கிரகணம் என்பது சூரியன், நிலவு, பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டிற்கு வரும் போது ஏற்படும். அவ்வாறு வரும் போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் என்றும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படும். 

ஒவ்வொரு ஆண்டு சராசரியாக நான்கு கிரகணங்கள் வரை நிகழ்கிறது. அந்த வகையில், சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் அது பகுதி சூரிய கிரகணம் எனவும் குறிப்பிடப்படுகிறது. 

அதன் படி, இன்று நிலவு பகுதியளவு மட்டும்சூரியனை மறுத்ததால் பகுதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இந்த கிரகணம், இந்தியாவில் மாலை 5.11 மணியளவில் தொடங்கியது. அதேபோல், தமிழகத்தில் 5.14 மணிக்கு கிரகணம் தெரியத் தொடங்கியது. 

இந்நிலையில், இன்று சென்னையில் உள்ள பெரியார் திடலில் "கிரகண மூட நம்பிக்கை ஒழிப்பு" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கி. வீரமணி தலைமையிலான திராவிடர் கழகத்தினர் பங்கேற்று சூரிய கிரகணம் நிகழ்ந்த நேரத்தில் உணவு சாப்பிட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஒரிரு கர்ப்பிணி பெண்களும் கலந்து கொண்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

solar eclipse dravidian kazhagam pregnent lady eating food


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->