ஒரு தேங்காய் ரூ.66 ஆயிரம் ரூபாய்.? இது தான் ஸ்பெஷல்.!  - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டத்தில் உள்ள போடி பகுதியில் பழமையான சுப்பிரமணியசாமி கோயில் அமைந்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கின்ற இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த ஏழு நாட்களாக மிகவும் கோலாலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. 

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டு வந்தனர். தொடர்ந்து, வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைப்பவம் நடத்தப்பட்டது. இதனால் அங்கே சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு தங்க கவசத்தை முருகப்பெருமானுக்கு அணிவித்து சிறப்பாக வழிபாடு நடந்தது.

இதில் பூஜையில் வைக்கப்பட்ட பொருட்கள் ஏலம் விடப்பட்டது. இந்நிலையில், கும்ப கலசத்தில் வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விட்ட போது அதை சுலக்ஷனா என்ற ஒரு பெண் 66 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார்.

கடந்த வருடம் இந்த தேங்காய் 27 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது. பூஜிக்கப்பட்ட தேங்காயை நமது வீட்டின் பூஜையறையில் வைத்தால் ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பப்படும் ஒரு விஷயம். 

எனவே பூஜையில் வைக்கப்பட்ட பொருட்களை பல்லாயிரத்திற்கு ஏலம் விடுவது ஒவ்வொரு வருடமும் நடக்கும் விஷயம் தான்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

soorasamhara thengay for 63 thousand


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->