ஊழல் கறை படிந்த காங்கிரஸ் - தி.மு.கவின் பேச்சாளராக மாறிவிட்டார் கமல் - வானதி சீனிவாசன் பேட்டி.! - Seithipunal
Seithipunal


ஊழல் கறை படிந்த காங்கிரஸ் - தி.மு.கவின் பேச்சாளராக மாறிவிட்டார் கமல் - வானதி சீனிவாசன் பேட்டி.!

கோயம்புத்தூரில் பந்தய சாலையில் மத்திய மண்டலம் அருகே கோயம்புத்தூர் மாவட்ட தெற்கு தொகுதி எம்.எல்.ஏவின் சட்டமன்ற அலுவலகம் ஒன்றுள்ளது. இந்த அலுவலகத்திற்கு முன்பு நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர், மோர் பந்தலை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் திறந்து வைத்து மக்களுக்கு வழங்கினார். 

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா? என்பதே தெரியாத அளவிற்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது. "அமைதி பூங்கா" என்று அழைக்கப்பட்டு வந்த தமிழகம் தற்போது மாறி உள்ளது. 

தமிழகத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று கட்சியை ஆரம்பித்த கமல், தற்போது அதை விட்டு விலகி செல்வது போல் தெரிகிறது. மாற்றத்தை கொண்டு வருவோம் என்று கூறிய கமல்ஹாசன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற குறிக்கோளில் ஊழல் கறை படிந்த காங்கிரஸ் மற்றும் தி.மு.கவின் நட்சத்திர பேச்சாளராக திகழ்ந்து வருகிறார். 

பா.ஜ.கவை பொறுத்தவரை எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறும். பா.ஜ.கவில் இருந்து எவ்வளவு பெரிய தலைவர்கள் சென்றாலும், அதனால் கட்சிக்கு எந்த பின்னடைவும் கிடையாது. ஏனென்றால் தொண்டர்கள் கட்சியோடு இருக்கிறார்கள். கர்நாடகாவில் பா.ஜ.க தனிப்பெரும் பான்மையுடன் இந்த முறை ஆட்சி அமைக்கும்" என்று அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

speaker of dmk and congrass kamal vanathi seenivasan speach


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->