மலிவு விலையில் உணவு வழங்க ஏற்பாடு - அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


கிளாம்பாக்கத்தில் மலிவு விலையில் உணவு வழங்க ஏற்பாடு செய்ய உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் வார விடுமுறை மற்றும் விஷேச நாட்களில் பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இருப்பதால், எந்த வித சிரமமும் இல்லாமல் பயணம் செய்ய சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம். 

இது தொடர்பாக பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-

"ஆடிப்பெருக்கையொட்டி வரும் தொடர் விடுமுறையால் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள உணவகங்களில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் கூறி மலிவு விலையில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

பள்ளி வேலை நேரங்களில் போக்குவரத்து வசதி குறைவாக உள்ள பகுதிகளை கண்டறிந்து கவனம் செலுத்தி அந்தப் பகுதியில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்" என்றுத் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

special bus run in tamilnadu for aadi 18 and week off minister sivasangar info


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->