திருவண்ணாமலை கோவிலில் சிறப்பு தரிசனக் கட்டணம் ரத்து.!
special dharisanam fees cancelled in thiruvannamalai temple
திருவண்ணாமலை கோவிலில் சிறப்பு தரிசனக் கட்டணம் ரத்து.!
சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலாமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் திகழ்கிறது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில். இங்கு ஈசன் மலை உருவில் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இப்படி பல சிறப்புகளைக் கொண்ட இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களிலும், கார்த்திகை தீபத் திருநாளன்றும் தமிழகம் மட்டுமில்லாமல் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.
![](https://img.seithipunal.com/media/tiruvannamalai temple-drc85.png)
இந்த நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் செய்ய சிறப்பு கட்டணம் நடைமுறையில் இருந்தது. தற்போது இந்த சிறப்புக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில், பௌர்ணமியை யொட்டி அண்ணாமலையார் கோவிலில் இனி பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்துகொள்ளலாம் என்றும்
சிறப்பு கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த கட்டணமும் ரத்துசெய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
English Summary
special dharisanam fees cancelled in thiruvannamalai temple